
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் துவங்கி நடைபெற்றது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸையும், மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீனையும் வாங்கியது. சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸை தவிர்த்து அஜிங்கிய ரஹானே என்ற பெரிய வீரரை மட்டும்தான் வாங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் மீட்டிங்கில், போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் வழக்கம்போல உள்ளூர் மைதானங்களில்தான் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு அணிக்கு எதிராக ஒரு போட்டியை சேப்பாக்கத்திலும், மற்றொரு போட்டியை எதிரணியின் சொந்த மைதானத்திலும் விளையாடும். அதாவது 2019ஆம் ஆண்டில் இருந்த நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 31 ஆம் தேதி முதல் முதல் போட்டி ஆரம்பமாகிறது. முதல் போட்டியிலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
முதல் 5 போட்டிகளின் விவரம்
Chennai Super Kings vs Gujarat Titans – 31st March.
Punjab Kings vs Kolkata Knight Rides – 1st April.
Lucknow Super Giants vs Delhi Capitals – 1st April.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals – 2nd April.
Royal Challengers Bangalore vs Mumbai Indians – 2nd ஏப்ரல்
