Samantha:மீண்டும ஊ சொல்றியா மாமானு குத்தாட்டம் போட மறுத்த சமந்தா: காரணம்…

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்த புஷ்பா படம் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் ஊ சொல்றியா மாமா என்கிற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் சமந்தா.

அவரின் குத்தாட்ட பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. கல்லூரி விழாக்கள், விடுதி நிகழ்ச்சிகளில் எல்லாம் மாணவிகள் ஊ சொல்றியா மாமானு டான்ஸ் ஆடும் அளவுக்கு சமந்தாவின் ஸ்டெப்ஸ் அனைவரையும் கவர்ந்துவிட்டது.

ஊ சொல்றியா மாமா ஒரு குத்துப்பாட்டு என்பதை மறந்து குடும்பத்துடன் அமர்ந்து பார்த்தார்கள். பேருந்து, ரயில்கள், மெட்ரோக்களிலும் மக்கள் அந்த பாடல் வீடியோ செல்போன்களில் பார்த்து மகிழ்ந்தார்கள். இந்நிலையில் தான் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

புஷ்பா 2 படத்திலும் சமந்தாவையே குத்தாட்டம் போட வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார் சுகுமார். இதையடுத்து சமந்தாவை அணுகி, சம்மு நம்ம படத்தில் ஒரு குத்துப்பாட்டு இருக்கிறது. நீங்கள் தான் டான்ஸ் ஆட வேண்டும் என்று கேட்டிருக்கிறார் சுகுமார். அதற்கு அவர் எதிர்பாராத பதிலை அளித்துவிட்டார் சமந்தா.

தற்போது நான் குத்துப்பாடலுக்கு ஆட விரும்பவில்லை என்றாராம் சமந்தா. அதை கேட்ட சுகுமாரோ, பாடல் என்று மட்டும் இல்லை. உங்களுக்காக ஒரு கதாபாத்திரத்தை வேண்டுமானாலும் உருவாக்குகிறோம். டான்ஸ் ஆடுங்கள் என்றாராம். நீங்கள் என்ன சொன்னாலும் சரி, நான் குத்தாட்டம் போடுவதாக இல்லை என்று தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டாராம் சமந்தா.

முன்னதாக ஊ சொல்றியா மாமா பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகையான திஷா பதானியை தான் ஆட வைக்க நினைத்தார்களாம். அவர் முடியாது என்று கூறிய பிறகே சமந்தாவை அணுகியிருக்கிறார்கள். குத்தாட்டம் போடச் சொன்னதுமே சமந்தா ஒப்புக்கொள்ளவில்லை.

நானா, குத்தாட்டம் போடுவதா என தயங்கியிருக்கிறார். அவரின் தயக்கத்தை பார்த்த ஹீரோ அல்லு அர்ஜுன் தான் அவரை ஊக்குவித்து டான்ஸ் ஆட வைத்திருக்கிறார். அவர் குத்துப் பாடலுக்கு ஆட பல கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புஷ்பா பட ஹீரோயின் ரஷ்மிகா மந்தனாவை விட சமந்தா தான் அதிகம் பேசப்பட்டார். இந்நிலையில் தான் அவர் மீண்டும் குத்தாட்டம் போட மறுத்திருக்கிறார்.

மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடி வருகிறார் சமந்தா. அதற்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தனக்கு இப்படி ஒரு நோய் இருப்பதை அவர் தைரியமாக சொன்ன விதம் தான் அனைவரையும் கவர்ந்தது.

Samantha:பழனி முருகனை தரிசித்த சமந்தா: நீங்க பண்ணது தப்புனு சொல்லும் ரசிகர்கள்

இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு சென்று தன் உடல்நலம் தேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்திருக்கிறார் சமந்தா. 600 படிகளிலும் கற்பூரம் ஏற்றியிருக்கிறார். அவர் 600 படியேறியதை பார்த்த ரசிகர்கள் கலங்கிவிட்டார்கள்.

உங்கள் உடம்பு இருக்கும் நிலையில் இத்தனை படி ஏறலாமா சம்மு?. நல்லா இருப்பவர்களுக்கே 600 படி ஏறுவது கடினம். தயவு செய்து இனியும் உங்கள் இப்படி வருத்திக்கொள்ளாதீர்கள். உடல்நலம் முக்கியம் சம்மு. நீங்கள் நலமாக இருந்து இப்படி 600 படி ஏறியிருந்திருந்தால் நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம் என்றார்கள் ரசிகர்கள்.

Sivakarthikeyan:அடடே, சிவகார்த்திகேயனுக்கும், சூப்பர் ஸ்டாருக்கும் இடையே இவ்ளோ ஒற்றுமையா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.