Vikatan Exclusive: “இப்பவும் நான் ஒரு கம்யூனிஸ்ட்தான்!" – சத்குரு ஜக்கி வாசுதேவ் நேர்காணல்

ஆனந்த விகடன் யூடியூப் சேனலின் கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியில் தனது கடந்த கால வாழ்க்கை, ஆன்மிகம் எனப் பலவற்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள்.

மைசூரில் ஆரம்பித்த உங்களது ஆரம்பகட்ட வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்…

“என் கடந்த கால வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியமானதுதான். என்னுடைய அப்பா கண் மருத்துவர். அம்மா ஒரு பக்தியான ஆன்மிக சிந்தனைகள் நிறைந்த பெண்மணி. மூணு பேரு என் கூட பிறந்தவங்க; அதுல நான் தான் கடைக்குட்டி. அப்பாவின் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலையினால் நாங்க ஒரு ஊருன்னு இருந்தது கிடையாது. சொல்லப்போனால் நான் 12 வயது வரை நாத்திகனாக தான் இருந்தேன் எனக்குள்ள நிறைய கேள்விகள் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், எந்தக் கேள்விக்கும் பதில் இருக்காது. பதின் பருவங்களில் நான் மேற்கத்திய கலாச்சாரத்தை விரும்பும் மனிதனாகவே இருந்தேன். மேற்கத்திய கலாச்சாரம் என்பது பொருள் சார்ந்த கலாச்சாரம். அதனால்தான் என்னமோ மனிதர்கள் பலர் தங்களின் பதின் பருவங்களில் மேற்கத்திய கலாச்சாரத்தையே விரும்புகின்றனர். பின், நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது மிகவும் ஆர்வமாக இருந்தேன். 18 ,19 வயதில் புரட்சி என்றெல்லாம் போனேன். இந்த மாதிரிதான் என் ஆரம்ப காலக்கட்ட வாழ்க்கை இருந்தது.”

கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா

நீங்க யோகியா, குருவாகவா , சத்குருவாகவா இல்லை ஆன்மீகவாதியா? மனதில் உங்களைப் பற்றிய நிலை என்ன?

“உயிரோடு இருக்கிற வரைக்கும் நான் என்னை அப்படி எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டேன். சத்குரு மக்கள் எனக்கு வைத்த பெயர் தான். நான் என்னை அப்படி நினைக்கவில்லை.”

“நீங்கள் பதின் வயதில் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டீர்கள், அந்தக் காலத்தில் நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொன்னீர்கள். இப்போது நீங்க ஒரு கம்யூனிஸ்டா?

“இந்த யோகா மையத்தைப் பாருங்கள். கம்யூனிசம் என்பது தெருவில் இறங்கி போராட்டம் செய்து தீ வைப்பதில்லை. இந்த யோகா மையத்தில் பல மதத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். பல ஜாதியைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் யாரிடமும் நீ எந்த மதம் ;எந்த ஜாதி என்று கேட்டதில்லை. என்னை பொறுத்தவரையில் இதுதான் கம்யூனிஸ்ட். இந்த பூமியைப் பொறுத்தவரையில் எல்லோரும் சமம் தான். அதுதான் உண்மையான கம்யூனிஸம்”

கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா

முழு பேட்டியைக் காண…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.