சிட்னி: இந்தியாவில் காலனித்துவ முறையில் இருந்து பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு ‘ரைசினா @ சிட்னி’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது என்பதை உறுதியுடன் கூறுவேன். அதேபோல், அமெரிக்காவின் எண்ணத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1960,80, 2005களில் நாம் கையாண்ட அதே அமெரிக்க அல்ல
நாம் உண்மையில் இன்று புதிய பிராந்திய கருத்துகள், புவிசார் அரசியல் கொள்கை, புதிய வழிமுறைகள் ஆகியவை உள்ளன.
இனி நமது தகவல்களை யார் பயன்படுத்துவார்கள் என சந்தேகிக்க முடியாது. எனது தரவு எங்கே உள்ளது. யார் அதை பயனபடுத்துகிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பது தான் முக்கியம்
தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், நியூயார்க்கில் அமர்ந்து இருக்கும் வயதான பணக்கார கருத்துடைய நபர். முழு உலகம் எப்படி இயங்குகிறது என்பதை அவருடைய பார்வைகள் தீர்மானிக்க வேண்டும் என்று இன்னும் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உண்மையில் கதைகளை வடிவமைக்கிறார்கள்.
அவரை பொறுத்தவரை, தங்களுக்கு வேண்டியவர்கள் வெற்றி பெற்றால், தேர்தல் நல்லது என நினைக்கிறார்கள். ஆனால், தேர்தல் வேறு முடிவை தந்தால், ஜனநாயகத்தை குறை கூறுகிறார்கள்.
கடந்த 3 தசாப்தங்களில் இந்தியாவில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நமது வர்த்தகத்தின் பெரும்பகுதி கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது. இன்று 50 சதவீதத்திற்கும் மேலான வர்த்தகம் இந்தியாவின் கிழக்கு நாடுகளுடன் உள்ளது. இது மேற்கு ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை மையமாக கொண்ட காலனித்துவ முறையில் இருந்து பெரிய மாற்றம் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.
கிரிக்கெட் குறித்து ஆலோசனை
முன்னதாக, ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி அல்பேன்சை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினார். இன்னும் இரண்டு மாதங்களில் ஆஸி., பிரதமர் இந்தியா வர உள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

சந்திப்பு தொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கை: ஆஸி., பிரதமரை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடியின் வாழ்த்தை அவரிடம் தெரிவித்தேன். இரு நாட்டு உறவின், பலத்தை இந்த சந்திப்பு எடுத்து காட்டுகிறது. இந்த சந்திப்பின் போது கிரிக்கெட் குறித்தும் ஆலோசித்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்