கிரிக்கெட் வீரரை தாக்கிய விவகாரம்: பெண் யூடியூபரை கொல்ல முயற்சி? சப்னா கில்லுக்கு போலீஸ் காவல்

மும்பை: கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவை தாக்கிய விவகாரத்தில் பெண் யூடியூபர் சப்னா கில்லை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா, மும்பையின் ஓஷிவாராவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு தனது நண்பருடன் சாப்பிடச் சென்றபோது, இரண்டு ரசிகர்கள் (ஒரு ஆண், ஒரு பெண்) அவருடன் செல்பி எடுக்க விரும்பினர். சில புகைப்படங்கள் எடுத்த அவர்கள், தொடர்ந்து மேலும் படங்கள் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது மறுப்பு தெரிவித்த பிருத்வி ஷா, தனது நண்பர் மற்றும் ஓட்டல் மேலாளரை அழைத்து, ரசிகர்களை வெளியேற்றும்படி கூறினார். இதனால் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பிருத்வி ஷா நண்பருடன் வெளியே வந்தபோது அவரை சிலர் ‘பேஸ்பால்’ மட்டைகளுடன் வந்த சிலர் அவரது காரை தாக்கி சேதப்படுத்தினர். இதனால் பிருத்வி ஷா வேறு காரில் ஏறி சென்றார். இருந்தும் அந்த காரையும் துரத்தி சென்று சிலர் தாக்கினர். இவ்விவகாரம் தொடர்பாக பிருத்வி ஷாவின் நண்பர் அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் சப்னா கில் என்ற பெண் உள்ளிட்ட 8 பேர் மீது ஐபிசி 143, 148, 149, 384, 437, 504, 506 பிரிவுகளின் போலீசார் கைது செய்தனர்.

அதேநேரம் சப்னா கில் தரப்பில், தாங்கள் தவறும் செய்யவில்லை என்றும், சப்னா கில்லை பிருத்வி ஷா தாக்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சப்னா கில்லை வரும் 20ம் தேதி வரை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அப்போது சப்னா கில்லின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில், ‘சமூக ஊடகங்களில் பிருத்வி ஷா பிரபலமாக உள்ளார். அவரை கொல்ல பிருத்வி ஷா முயற்சித்தார். பிருத்வி ஷாவுக்கு மது பழக்கம் இருந்ததால், அவருக்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது. எனவே இந்த விவகாரத்தை போலீசார் முறையாக விசாரிக்க வேண்டும்’ என்று கோரினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.