நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே காதல் மனைவியை பெண் வீட்டார் கடத்திச் சென்றதாக கணவர் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே ஸ்ரீரங்கநாராயணபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற இளைஞரும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுமிகா என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத நிலையில் கடந்த மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் உள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் திருமணம் செய்து கொண்ட இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சுமிகாவின் தந்தை முருகேசன் தனது மகளை காணவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஆஜரான சுமிகா பெற்றோருடன் செல்ல மறுத்ததை அடுத்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் பெண் வீட்டார் முருகேசன் மற்றும் அவரது பெற்றோரை தாக்கிவிட்டு சுமிகாவை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணை கடத்திய 10 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் கூடங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.