வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லெபனான்: சிரியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், பொதுமக்கள் 46 பேர், ராணுவ வீரர்கள் 7 பேர் என மொத்தம் 53 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே போல் ஐ.எஸ் போன்ற சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சிரியாவின் பாலை வனப்பகுதியான அல்-சொக்னா பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 46 பேர், ராணுவ வீரர்கள் 7 பேர் என மொத்தம் 53 பேர் உயிரிழந்தனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement