புதுடில்லி, புதுடில்லியில், 7 வயது சிறுமியை தத்தெடுத்து கொடுமைப்படுத்திய தாயையும், மகனையும், போலீசார் ‘போக்சோ’ சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
புதுடில்லியில் ஆர்.கே.புரத்தைச் சேர்ந்தவர், மத்திய அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.
தன் மகனுடன் வசித்து வந்த இவர் உறவினரின் 7 வயது மகளை தத்தெடுத்தார்.
இச்சிறுமியை, தாயும், மகனும் தினமும் அடித்து துன்புறுத்தியதுடன், சூடு வைத்தும் கொடுமைப் படுத்தினர்.
இதனால் ஏராளமான தழும்புகள், காயங்களுடன் பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் வகுப்பாசிரியை விசாரித்தார். சிறுமியும் தனக்கு நேரும் பலவித கொடுமைகளை தெரிவித்தார்.
இது தொடர்பாக பள்ளியிலிருந்து புகார் தரப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை குழந்தைகள் நல மையத்திற்கு அனுப்பி வைத்தனர்; கொடுமைப்படுத்திய தாய், மகனை கைது செய்தனர்.
முறையாக தத்தெடுக்காததுடன், சிறுமியை அடித்து துன்புறுத்தியதால், போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தாயையும், மகனையும் சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement