ஜெகன்மோகனின் சரிவுக்கான கவுன்ட் டவுன் ஆரம்பம் – சந்திரபாபு நாயுடு சாடல்

ஆந்திரா: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பொதுக்கூட்டத்திற்கு சென்றுகொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று அந்த குடத்தில் பங்கேற்றார். கிழக்கு கோதாவரியில் உள்ள அனபர்த்தி என்ற இடத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு சென்று கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் வாகனம் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அவரது வாகனங்களுக்கு முன்பு லாரி, பேருந்து, கார்களை நிறுத்தி போலீசார் தடுப்பு ஏற்படுத்தினர். தடுப்புகளை தாண்டி சந்திரபாபு நடந்து சென்றார்.

அப்போது போலீசாருக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தனது வாகனம் தடுக்கபட்ட போதும் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று சந்திரபாபு நாயுடு அனபர்த்தி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசும் போது முதலமைச்சர் ஜெகன் மோகனையும் போலீசாரையும் கடுமையாக எச்சரித்தார். சந்திரபாபு நாயுடு ஆந்திரா முழுவதும் இதி ஏமி கருமா அதாவது இது என்ன வினை பயன் என்ற தலைப்பின் கீழ் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு கந்தகுர், குண்டூரில் நடந்த இவரது பொது கூட்டங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் மரணமடைந்தனர். இதனால் நேற்றைய கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. முதலமைச்சர் ஜெகன் மோகனை மனநோயாளி என்று சாடிய சந்திரபாபு ஜெகன் ஆட்சிக்கட்டு கவிழ்வதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.