தஞ்சை: புடவையை மீட்டெடுக்க புதிய முயற்சி – புடவையுடன் நடை போட்டியில் பங்கேற்ற பெண்கள்

தமிழ்நாட்டில் முதன் முறையாக புடவையுடன் மகளிர் பங்கேற்ற நடை பயண போட்டியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கம் 1973 – 2023, தனது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பாரம்பரிய உடைகளுக்கான கௌரவத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக புடவையில் ஓர் நடை பயணம் என்ற போட்டி தஞ்சை பெரிய கோவில் முன்பு நடைபெற்றது,
image
இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மேயர் ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர், இதில், 18 முதல் 35 வயது வரை உள்ள மகளிர்க்கு 4 கிலோ மீட்டர் தூரமும், 36 முதல் 59 வயது வரை உள்ள மகளிர்க்கு 3 கிலோமீட்டர் தூரமும், 60 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 1 கிலோமீட்டர் தூரம் என வயது வாரியாக போட்டிகள் நடைபெற்றது,
image
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது, இந் நிகழ்ச்சியில் பொன் விழாக்குழு தலைவர் உஷா நந்தினி உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.