தனுஷின் 'வாத்தி' முதல் நாள் வசூல்: வேட்டையாடியதா… கோட்டைவிட்டதா…

Vaathi Movie First Day Collection: கோலிவுட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான துணிவு, வாரிசு படங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி, வசூலை குவித்தன. நீண்ட நாள்களுக்கு பின் வெளியான அஜித் – விஜய் படம் என்பதால் இரண்டு படங்களுக்கும் வரவேற்பு இருந்தது. அந்த படங்களுக்கு கூட்டம் சற்று குறைந்த பின்னரே சிறிய பட்ஜெட் படங்கள் திரையரங்கை நோக்கி ஓடி வந்தன.

அந்த வகையில், சென்ற வாரம் வெளியான டாடா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளதால், திரையரங்கில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பெரிய அளவில் விளம்பரம் இன்றி வெளியாகி, வாய்வழியாக அந்த படம் மக்களுக்கு சென்றடைந்துள்ளதாக திரைப்பட ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர். 

தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ திரைப்படமும், மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்திருந்த பகாசுரன் படமும் நேற்று (பிப். 17) வெளியாகின. வாத்தி திரைப்படம் ‘Sir’நேரடியாக தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. இதில், வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. பகாசுரன் திரைப்படம் மோசமான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பெற்று வருவதால், அப்படத்தின் வரவேற்பை அறிய சில நாள்கள் ஆகும் எனவும் கூறப்படுகிறது. 

வசூல் விவரம்

இந்நிலையில், வாத்தி திரைப்படத்தின் முதல் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. முதல் நாளில் வாத்தி திரைப்படம் மொத்தம் 14 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 8 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், தெலுங்கில் 3 கோடி ரூபாய், கர்நாடகாவில் 1.5 கோடி ரூபாய், வெளிநாட்டில் 1.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வாத்தி படம், நேற்று தமிழ்நாட்டின் பெரும்பாலான திரையரங்குகளில் காலை 8 மணிக்கே வெளியிடப்பட்டது. தனுஷின் கடந்த திரைப்படமான திருச்சிற்றம்பலம் குடும்பங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, மாதக்கணக்கில் திரையரங்கில் ஓடியதால், வாத்தி திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியது. 

ஆனால், டாடா படத்தின் வெற்றி வாத்தி வசூலை குறைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. வாத்தியில் தனுஷ் குடும்ப ரசிகர்களுக்காக எடுத்திருப்பதாகவும், இளைஞர்கள் தரப்பில் பெரிதும் ஈர்க்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தின் இயக்குநரான வெங்கி அட்லூரி தெலுங்கு இயக்குநராவார். எனவே, இந்த படம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது. அப்படியிருக்கையில், படத்தில் வாய்ஸ்-சின்க் பிரச்னை இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Review: Unlocked கிரைம் திரில்லர் கொரிய திரைப்பட ரிவ்யூ! திகிலூட்டும் சஸ்பென்ஸ்!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.