நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 11 நாட்கள்… பிறந்த குழந்தையை முதல்முறையாக சந்தித்த தந்தை: நெகிழ்ச்சி தருணம்


துருக்கியின் 11 பிராந்தியங்களை மொத்தமாக உருக்குலைத்த நிலநடுக்கத்தில் சிக்கி 11 நட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட தந்தை ஒருவர், தமக்கு பிறந்த மகளை முதல்முறையாக சந்தித்துள்ளார்.

மகப்பேறு சிகிச்சையை எதிர்நோக்கி

துருக்கி நிலநடுக்கத்தின் போது 33 வயதான Mustafa Avci என்பவரும் அவரது மனைவியும் சுகாதார மையம் ஒன்றில் மகப்பேறு சிகிச்சையை எதிர்நோக்கி காத்திருந்துள்ளனர்.

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 11 நாட்கள்... பிறந்த குழந்தையை முதல்முறையாக சந்தித்த தந்தை: நெகிழ்ச்சி தருணம் | Earthquake Rubble 11 Days Father Newborn Daughter

@reuters

ஆனால், துரதிர்ஷ்டவசமாக நிலநடுக்கத்தில் அந்த சுகாதார மையமும் சிக்கிக்கொள்ள, மொத்தமாக இடிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிக்கொண்ட பலபேர்களில் சுமார் 261 மணி நேரங்களுக்கு பின்னர் Mustafa Avci மற்றும் அவரது கர்ப்பிணி மனைவியும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், கடும் போராட்டங்களுக்கு பிறகு இருவரும் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதுடன், வெள்ளிக்கிழமை முதன்முறையாக் Mustafa Avci தமது பிஞ்சு மகளை சந்தித்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படத்தில் அவரது மனைவி Bilge மகளை தந்தையிடம் காண்பிக்க, Mustafa Avci கண்கலங்கியபடி தமது மகளை ஆசையுடன் முத்தமிடுகிறார்.

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 11 நாட்கள்... பிறந்த குழந்தையை முதல்முறையாக சந்தித்த தந்தை: நெகிழ்ச்சி தருணம் | Earthquake Rubble 11 Days Father Newborn Daughter

@getty

கண்ணீருடன் நன்றி தெரிவித்திருந்தார்.

முன்னதாக Mustafa Avci-ஐ மீட்க கடுமையாக போராடிய மீட்பு குழு உறுப்பினர் ஒருவரின் கையை முத்தமிட்டு, கடவுள் உங்களை ஆயிரம் மடங்கு ஆசீர்வதிப்பார் எனவும், உங்கள் தேவைகளின் போது கடவுள் உடனிருப்பார் எனவும் Mustafa Avci கண்ணீருடன் நன்றி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தாயார் ஒருவரும் 14 வயது சிறுவனும் சுமார் 260 மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14 வயது ஓஸ்மான் மீட்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து 17 சடலங்களையும் மீட்டுள்ளனர்.

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 11 நாட்கள்... பிறந்த குழந்தையை முதல்முறையாக சந்தித்த தந்தை: நெகிழ்ச்சி தருணம் | Earthquake Rubble 11 Days Father Newborn Daughter

@EPA

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 45,000 பேர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

மில்லியன் மக்கள் கடும் குளிரில் தங்க இடமின்றி, தவிக்க விடப்பட்டுள்ளனர்.
மொத்தம் 11 பிராந்தியங்களை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இப்பகுதிகளில் பெரும்பாலும் புலம்பெயர்ந்த மக்கள் குடியமர்த்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.