பாட்டியை ஓடும் காரில் துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுமி: இறுதியில் தெரியவந்த உண்மை


அமெரிக்காவில் ஓடும் காரின் பின் இருக்கையில் இருந்து 57 வயதுடைய பாட்டியை 6 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் புளோரிடாவில் 6 வயது சிறுமி தனது பாட்டியை ஓடும் காரின் பின் இருக்கையில் இருந்து துப்பாக்கியால் சுட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வடக்கு துறைமுக பொலிஸார் வழங்கிய ஊடக அறிக்கையில், சிறுமி தனது 57 வயது பாட்டியின் துப்பாக்கியை காரின் பின் இருக்கையில் உள்ள பாக்கெட்டில் இருந்து கண்டெடுத்துள்ளார்.

பாட்டியை ஓடும் காரில் துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுமி: இறுதியில் தெரியவந்த உண்மை | Us Florida Girl 6 Shoots Grandmother In Moving Car

பிறகு வாகனத்தின் பின் இருக்கையில் துப்பாக்கியை தூக்கி பிடித்த சிறுமி, தற்செயலாக ஓட்டுநர் இருக்கை வழியாக துப்பாக்கியை இயக்கியுள்ளார்.

இதில் கீழ் முதுகில் காயமடைந்த பாட்டி, மிகுந்த தடுமாற்றத்துடன் வாகனத்தை வீடு வரை ஓட்டிச் சென்றுள்ளார், பின் அமெரிக்க அவசர உதவி எண் 911 ஐ அழைத்த நிலையில், பாட்டி “அச்சுறுத்தாத காயங்களுடன்” மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார்.

விசாரணை

இதையடுத்து சிறுமி மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற அனைத்து தரப்பினரிடமும் வடக்கு துறைமுக காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

பாட்டியை ஓடும் காரில் துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுமி: இறுதியில் தெரியவந்த உண்மை | Us Florida Girl 6 Shoots Grandmother In Moving CarKatie Blackley/WESA

காவல்துறை தலைவர் டோட் கேரிசன் வெளியிட்ட அறிக்கையில், துப்பாக்கி பாதுகாப்பு அணுகுமுறைக்கு இது சிறந்த உதாரணம், அனைவரும் இதில் சரியாகி விடுவார்கள் என்று தோன்றினாலும், பாட்டி சிறுமி என இருவரும் இந்த சம்பவம் மிகவும் மோசமாக இருந்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விசாரணையின் இறுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தற்செயலானது என்றும் பொலிஸார் அறிவித்தனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.