பி.பி.சி.,நிறுவனத்தின் வருமான கணக்குகள் ஒத்துப்போகவில்லை| BBC, companys income accounts do not match

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பி.பி.சி.,யின் பல்வேறு துணை நிறுவனங்களால் காட்டப்பட்டுள்ள வருமானம் மற்றும் லாபத்துக்கும், இந்நிறுவனம் இந்தியாவில் செயல்படும் அளவுக்கும் ஒத்துப்போகவில்லை என, வருமான வரித் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

டில்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி., நிறுவன அலுவலகங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள், ௧௪ல் துவங்கி மூன்று நாட்களுக்கு ஆய்வு நடத்தினர்.

latest tamil news

இதற்குப் பின், மத்திய நேரடி வரிகள் வாரியம், பி.பி.சி., பெயரை குறிப்பிடாமல் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இந்நிறுவன ஊழியர்களின் வாக்குமூலம், ‘டிஜிட்டல்’ நகல்கள் மற்றும் ஆவணங்கள் என முக்கிய ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

இதன் அடிப்படையில், பரிமாற்ற விலை ஆவணங்கள் தொடர்பான பல்வேறு முரண்பாடுகள் மற்றும் வித்தியாசங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.