மனசுல பெரிய பருத்திவீரன்னு நெனப்பு.. கிளாஸ் எடுக்குறாரு..! கத்தி எடுத்த கைகள் டேமேஜ்..!

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் சாலையோரம் ஹெல்மெட் விற்ற ஆசாமியிடம் மாமூல் கேட்டு கத்தியால் வெட்டிய இரு கஞ்சா குடிக்கிகளை போலீசார் மடக்கிப்பிடித்த நிலையில், போலீசுக்கு கொஞ்சம் கூட அஞ்சாமல் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. கஞ்சா போதையில் ஜாம்பி போல சுற்றும் விபரீத போதையர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…

கெத்து என்ற பெயரில் போலீசார் முன்னிலையில் காலைதூக்கி மிரட்டும் இவர்கள் தான் கையில் கத்தியுடன் தாக்குதல் நடத்திய கஞ்சா குடிக்கி ஜாம்பிகள்..!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் சாலையோரம் ஹெல்மெட் விற்றுக் கொண்டிருந்த ராஜாகுமார் சிங் என்ற வட மாநில இளைஞரிடம் ரவுடி மாமூல் கேட்டு, அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியால் அவரது தலையில் வெட்டியதாக இவர்கள் இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்

காயம்பட்ட ராஜா குமார் சிங்கை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் . போலீசாரிடம் சிக்கிய இருவரும் அதே பகுதியை சேர்ந்த சதிஷ் குமார் ,ராகேஷ் என்பது தெரியவந்தது. அதில் ராகேஷ் என்பவன் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வரும் போது பருத்திவீரன் கார்த்தி போல பத்திரிக்கையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்னவாரு வெளியே வந்தான்

முன்னதாக இருவரிடம் இருந்தும் கத்தியை பறிக்க முயன்ற போது தரமறுத்து அடம்பிடித்து, தவறி கீழே விழுந்ததில் கைகளில் காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்த நிலையில், தங்களை படம் பிடித்த செய்தியாளர்களை நோக்கி, போலீசார் தங்களை பொய்வழக்கில் கைது செய்துள்ளதாகவும் இதனை செய்தியாக வெளியிடாவிட்டால் பெயில் எடுத்து வந்து தரமாக செய்வோம் என்றும் பகிரங்க மிரட்டல் விடுத்ததோடு, நண்பனுக்கு கையில் அடிபட்டிருக்கு யாராவது உதவி செய்றீங்களா ? என்று காவல் நிலையம் வாசலில் நின்று லேகியம் விற்பவர் போல புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த கஞ்சா குடிக்கி இளைஞர்

அலப்பறை கொடுத்த இருவரையும் அழைத்துச்சென்று முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர் .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.