யாழிலிருந்து சங்கானை ஊடாக மாதகலிற்கு பயணிகளை ஏற்றிச்சென்ற
தனியார் பேருந்து மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சண்டிலிப்பாயைச் சேர்ந்த இருவர் இவ்வாறு பேருந்து மீது மேற்கொண்ட தாக்குதலில்
பேருந்தின் பின்பக்கம் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மானிப்பாய் பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.