பொதுவாக நமது உடலில் கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகள் மற்ற பகுதிகளை விட சற்று கருப்பாக இருக்கும்.
இதற்கு அப்பகுதியில் ஏற்படும் வறட்சியினால் இறந்த செல்கள் தேங்கி இருப்பது தான் காரணமாகும்.
இதற்காக கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.
இந்த பகுதிகளில் உள்ள கருமையை நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிய வழியில் வெள்ளையாக்க முடியும்.
தற்போது முழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகளை இங்கே பார்ப்போம்.
- ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் மூன்று கறிவேப்பிலையை அரைத்து தண்ணீர் விட்டு பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரால் அதனை துடைத்து எடுத்து விட வேண்டும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்தால், அங்கு இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.
- 100 கிராம் காய்ந்த துளசி இலையை பொடி செய்து, அத்துடன் 1 ஸ்பூன் வேப்ப எண்ணெய், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் அரைத்த புதினா இலை சேர்த்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் காட்டனால் துடைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
- தினமும் கடுகு எண்ணெய் வைத்து 10 நிமிடம் முழங்கையில் மசாஜ் செய்து, பின் அந்த இடத்தை காட்டனால் துடைத்து எடுக்கவும். இவ்வாறு செய்தால் அந்த இடத்தில் உள்ள அழுக்கானது போய்விடும்.
- ஒரு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் வினிகரை விட்டு, முழங்கையில் தடவி, தினமும் 10 நிமிடம் மசாஜ் செய்யலாம்.
- எலுமிச்சை பழத்தை நறுக்கி அதில் உப்பை தடவி, முழங்கையில் 5 நிமிடம் தேய்த்து வரவும். இதனை தினமும் செய்தால் சிறிது நாட்களில் முழங்கையில் இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.