வரிச்சியூர் செல்வம்: ரத்தக்களறி ரவுடி டூ ஜாலியோ ஜிம்கானா… இப்ப இவர் வேற மாதிரி!

மதுரையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் வரிச்சியூர் செல்வம். ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல் என சமூகத்திற்கு அச்சுறுத்தலாக காணப்பட்டார். கூடவே கிலோ கணக்கில் அணிந்து செல்லும் நகைகள், இவரது அடையாளமாக மாறிப் போயின. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கின்றன. ஒருகட்டத்தில் என்கவுன்ட்டரில் போட்டு தள்ள போலீசார் உத்தரவு பிறப்பிக்கும் நிலையும் உண்டானது.

வரிச்சியூர் செல்வம் பேட்டிஅதன்பிறகு கடுமையாக எச்சரித்து வரிச்சியூர் செல்வத்தை அடங்கி ஒடுங்கி இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் முழுவதும் திருந்தி வாழ விரும்புவதாக கூறினார். இதையடுத்து போலீசார் ஒத்துழைப்புடன் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினார். இந்த சூழலில் பல்வேறு யூ-டியூப் சேனல்களுக்கு, புலனாய்வு இதழ்களுக்கு பேட்டியளித்து பேசுபொருளாகி வருகிறார்.
கிலோ கணக்கில் நகைகள்இவர் குறித்த வீடியோக்கள் நெட்டிசன்களுக்கு கண்டெண்ட் கொடுப்பது போல மாறிவிட்டது. சமீபத்தில் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆருக்கு தொப்பி, கருணாநிதிக்கு கண்ணாடி போல வரிச்சியூர் செல்வத்திற்கு நகை. சிறு வயதில் இருந்தே நகை போட்டு பழகி விட்டதால் அப்படியே தொடர்கிறேன். இதற்கு முறையாக வருமான வரி கட்டி உண்மையான குடிமகனாக விளங்குகிறேன்.
​​
தினசரி வேலைகள்அதேசமயம் நகைகள் அணிவது ஒரு ஜாலிக்காக மட்டுமே. யாராவது நிறைய நகைகள் போடும் போது, நீயென்ன வரிச்சியூர் செல்வம் போல நகைகள் போட்டிருக்கிறாய் என சொல்வார்கள் இல்லையா? அதற்காக தான். தற்போது சுமார் 200 பவுன் நகைகள் அணிந்திருக்கிறேன். காலையில் பார்க்கிங் வாக்கிங், அப்புறம் உடற்பயிற்சி கூடத்தில் தீவிர பயிற்சி. குளித்து சாப்பிட்டு விட்டு ஏதாவது சினிமாவிற்கு சென்று விடுவேன்.
விஐபி லிஸ்ட்என்னிடம் ஏகப்பட்ட கார்கள் இருக்கின்றன. அதன்பிறகு எனது பேரன், பேத்திகள் உடன் நேரம் செலவிடுவேன். மக்கள் என்னை ரவுடியாக பார்க்கவில்லை. அதெல்லாம் சிறு வயதிலேயே மாறிவிட்டது. இதனால் தான் விஐபி லிஸ்டில் வைத்திருக்கின்றனர். ஆர்வத்துடன் வந்து போட்டோ எடுக்கின்றனர். வாரத்தில் இரண்டு நாட்கள் விமானத்தில் சென்றுவிடுவேன். இந்தியாவில் சுற்றாத இடமே இல்லை.
வரிச்சூரான் வகையறா திரைப்படம்ரஜினி, விஜய் என பல நடிகர்களை சந்தித்துள்ளேன். எல்லாம் விமானப் பயணங்களில் சந்தித்தது தான். அஜித் மட்டும் இன்னும் பார்க்கவில்லை. கிராமப் பின்னணியில் ”வரிச்சூரான் வகையறா” என்ற பெயரில் திரைப்படம் ஒன்று எடுத்து கொண்டிருக்கிறேன். இது முழுக்க முழுக்க மக்களுக்கான படம். மதுரை ஓட்டலில் ஒருமுறை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
காயத்ரி ரகுராம் சர்ச்சைஅப்போது அங்கு வந்த காயத்ரி ரகுராம், மாஸ்டர் கணேசன் ஆகியோர் என்னை பார்த்தனர். உடனே புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால் அந்த புகைப்படத்தை வெளியிட்டு அந்த இரவில் என்ன நடந்தது என திருச்சி சூர்யா கேட்கிறார். பெண்களை மதிக்க தெரியாதவர் திருச்சி சூர்யா. இதுதவறு என அவரிடமே போன் போட்டு பேசினேன். அதைக் கூட தவறாக பயன்படுத்தி விட்டனர்.
​​
நெட்டிசன்களுக்கு கண்டென்ட்எனக்கு அரசியலில் சேரும் எண்ணமில்லை. சாதாரண மனிதனாகவே வாழ விரும்புகிறேன். ஆனால் என்னை ஜோக்கராக மாற்றி விட்டனர் என்று தெரிவித்தார். வரிச்சியூர் செல்வத்தின் புகைப்படங்களும், வீடியோக்களும் மீம்ஸ்களாக, ட்ரோல்களாக இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.