நடிகை ஹன்சிகா மோத்வானி வேகமாக வளர நான் ஹார்மோன் ஊசிகள் போட்டு இருந்தால் இந்த நேரம் டாடா மற்றும் பிர்லாவை விட பணக்காரியாக இருந்து இருப்பேன் என்று அவரது தாயார் பதிலளித்துள்ளார்.
“லவ் ஷாதி டிராமா” ஆவணப்படம்
8 வயதில் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய ஹன்சிகா மோத்வானி, பிறகு ஹிந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வர தொடங்கினார்.
சமீபத்தில் தனது நண்பரான சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஹன்சிகா மோத்வானி, அவரது கரியர், காதல், கல்யாணம் குறித்து பல்வேறு அனுபவங்களைப் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் “லவ் ஷாதி டிராமா” என்ற ஆவணப்படம் மூலம் பகிர்ந்து வருகிறார்.
இதில் தோழியின் காதலனை பறித்துக் கொண்டதாக வெளியான சர்ச்சை குறித்தும் ஹன்சிகா விளக்கமளித்துள்ளார்.
ஹார்மோன் ஊசி சர்ச்சை
ஆவணப்படம் மூலமாக பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நடிகை ஹன்சிகா மோத்வானி, பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக இருந்து தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகும் போது சிறிய இடைவெளியில் (2003 முதல் 2007 வரை) எப்படி இவ்வளவு வேகமாக வளர்ந்தார் என்று எழுந்த கேள்விக்கும், ஹன்சிகா வளர அவரது தாயார் ஹார்மோன் ஊசி போட்டிருக்கலாம் என்று எழுந்து இருந்த வதந்திக்கும் ஹன்சிகா தனது தாயாருடன் சேர்ந்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், எனக்கு 21 வயது இருக்கும் போது இத்தகைய வதந்திகள் எழுந்தது, அந்த நேரத்தில் அதுபற்றி நான் எதுவும் கூறவில்லை, அப்போதே அதைப் பற்றி எதிர்த்து பேசி இருக்க வேண்டும், இப்போது அது பற்றி பேசி ஒன்றுமில்லை என்றாலும் நான் வளர ஊசி போட்டுக் கொண்டதாக எழுதினார்கள்.
நான் 8 வயதில் நடிக்க வந்தேன், பெண்ணாக சீக்கிரம் வளர்வதற்காக எனது அம்மா எனக்கு ஹார்மோன் ஊசி போட்டதாக சொன்னார்கள் என்று ஹன்சிகா பேசி கொண்டே இருக்கும் போது, அருகிலிருந்த அவரது தாயார் ஒருவேளை இந்த செய்தி உண்மையானால் நான் இந்த நேரம் டாடா மற்றும் பிர்லாவை விட பணக்காரியாக இருந்து இருப்பேன்.
நீங்களும் வளர்வதற்கு என்னிடம் வாருங்கள் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்த ஹன்சிகாவின் தாயார், இப்படி எழுதுபவர்களுக்கு பொது அறிவே கிடையாதா என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்தார்.
அத்துடன் நாங்கள் பஞ்சாபிகள் எங்கள் மகள்கள் 12 வயது முதல் 16 வயது வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் வேகமாக வளர்வார்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.