வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்: தென்காப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் விமானத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டன.

கடந்தாண்டு ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் ஏற்படுத்திய ஒப்பந்த படி, நமீபியா அரசு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என எட்டு சிவிங்கிகளை நம் நாட்டுக்கு நன்கொடையாக வழங்கியது, இந்த சிவிங்கிகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று ( பிப்.,18) தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானப்படை விமானம் மூலம் 5 பெண் மற்றும் 7 ஆண் என 12 சிவிங்கி புலிகள் இந்தியா கொண்டு வரப்பட்டன. இந்த சிவிங்கி புலிகள் மத்திய பிரதேசத்தில் குவாலியர் என்ற இடத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement