Anasuya Bharadwaj: மலத்தின் மீது கல் வீசுறது போலருக்கு… செருப்பால் அடிப்பேன் என்ற அனசுயா.. குவியும் கண்டனம்!

பிரபல தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ். சுசாங்க் பரத்வாஜ் என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். புஷ்பா மற்றும் ரங்கஸ்தலம் படங்களின் பெரும் பிரபலமானவர் நடிகை அனுசுயா. இவர் தனது கணவர் பரத்வாஜூடன் எடுத்துக்கொண்ட போட்டோவை ஷேர் செய்து உங்களுடனான வாழ்க்கை மிகவும் வேடிக்கையான ரோலர் கோஸ்டர் சவாரி என்று கேப்ஷன் கொடுத்திருந்தார்.

இந்தப் பதிவை பார்த்த பலரும் நடிகை அனசுயாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் ஒரு நெட்டிசன், அனுசுயா சுசாங்க் பரத்வாஜை பணத்திற்காக மட்டும்தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். இந்த கமெண்டை பல நெட்டிசன்கள் லைக் செய்திருந்தனர். ஆனால் இந்த கமெண்டை பார்த்து கடுப்பான நடிகை அனசுயா, என்னடா தம்பி இப்படி சொல்லிவிட்டய்? அவரிடம்தான் பணம் இருக்கிறதா? என்னிடம் இல்லையா என்ன என்று கேள்வி எழுப்பியதோடு கன்னத்தில் போட்டுக்கொள்.. இல்லையென்றால் செருப்பால் உன் கன்னத்தில் நான் அடிப்பேன் என்று எச்சரித்தார்.

Vignesh Shivan, AK 62: அஜித் இல்லன்னா என்ன? பிரபல நடிகருடன் கூட்டு.. வெறித்தனம் காட்டும் விக்னேஷ் சிவன்!

இதனை பார்த்த நெட்டிசன்கள், உண்மையை சொன்னால் கோபம் வருகிறதா என சீண்டினர். இதனால் கோபமடைந்த அனசுயா, அதைப்பார்த்து கொந்தளித்த அனுசுயா எல்லாம் தெரிந்தது போல பேசதீங்க. மஞ்சள் காமாலை வந்தவர் கண்ணுக்கு உலகமெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியுமாம். உங்களின் புத்தி பணத்தில் இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் அப்படி இருக்காது. தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் என அறிவுரை கூறினார்.

Vaathi: பட்டையை கிளப்பிய வாத்தி… முதல் நாள் வசூல பாருங்க!

இந்நிலையில் நடிகை அனசுயாவின் பதிவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றனர். என்னதான் இருந்தாலும் பொது வெளியில் ஒருவரை செருப்பால் அடிப்பேன் என்று பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர். இப்படி பேசுவதால் உங்களின் மரியாதையை நீங்களே குறைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நாங்கள் லைக் செய்ய வேண்டும் புகழ வேண்டும். ஆனால் எங்களுக்கு தோன்றும் கருத்தை நாங்கள் சொல்லக்கூடாதா என கேட்டு வருகின்றனர்.

View this post on Instagram A post shared by Anasuya Bharadwaj (@itsme_anasuya)

அதேநேரத்தில் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு பதில் சொல்வது மலத்தின் மீது கல் எறிவதற்கு சமம் என்று பலரும் அனசுயாவுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். மேலும் தாயான பிறகும் வேலை செய்ய பெண்கள் படும் சிரமங்களை உணரக்கூடியவர்கள் பெண்களைப் பற்றி வீண் பேச்சு பேசுவதில்லை. எனவே, தகுதியில்லாத பதிலைச் சொல்லி உங்கள் மன அமைதியைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள், உங்கள் மதிப்பைக் குறைக்காதீர்கள் என்றும் அட்வைஸ் செய்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Jagapathi Babu: 7 நாட்கள் சாப்பாடு கொடுக்கமால் அவமானப்படுத்தினார்கள்… கண்ணீர்விட்ட ரஜினி பட வில்லன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.