அரசியல் மேடையில் நெஞ்சு வலி;23 நாள்களாக நடந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நடிகர் நந்தமுரி தாரக ரத்னா

2002  ஆம் ஆண்டு கோதண்டராமி ரெட்டியின் இயக்கத்தில், ‘ஒகடோ நம்பர் குராடு’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் நந்தமுரி தாரக ரத்னா.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர்  என்.டி. ராமராவின் பேரனும், சினிமா ஒளிப்பதிவாளர் மோகன கிருஷ்ணாவின் மகனுமான இவர், பல தெலுங்கு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு  ஓடிடியில் வெளியான ‘9 ஹவர்ஸ்’ என்ற வெப் சீரிஸில் நடித்த இவர் பலரின் பாராட்டைப் பெற்றிருந்தார். 

நந்தமுரி தாரக ரத்னா

இதனிடையே முழுநேர அரசியலில் நுழைய முடிவு செய்து, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து பணியாற்றிவந்த இவர்,  கடந்த ஜனவரி 27ம் தேதி நடந்த அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மாரடைப்பு ஏற்பட, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கடந்த 23 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். நந்தமுரி தாரக ரத்னாவின் மறைவு தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.     

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.