ஜனநாயகத்தின் வழியாக சர்வாதிகாரத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன என கமல்ஹாசன் பேசியுள்ளார். ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவில் ஜனநாயகத்தின் வழியாகவும் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசத்தை காக்க வேண்டும் என்று வரும் பொழுது யாருடன் கைகோர்க்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். இந்தியாவை பாதுகாக்கவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு எனவும் அவர் பேசியுள்ளார்.
