இளங்கோவன் வெற்றி பெற்றால் இன்னொரு இடைத்தேர்தல் வரும் – நாதக பொளேர்..!

நாம் தமிழர் கட்சியின் இந்த பேச்சு அரசியல் அரங்கில் மிகுந்த விவாதத்தை கிளப்பியுள்ளது.

தேர்தல் களம்இரண்டரை லட்சம் வாக்காளர்களை கொண்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகள் தங்கள்து வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டாலும் முழுக்க முழுக்க திமுக செல்வாக்கிலேயே அவர் களத்தில் உள்ளார்.
ராஜினாமாநான்கு கட்சிகள் போட்டியிடும் இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியை சுருக்க திமுக கூட்டணி புதுப்புது யூகங்களை வகுப்பதாக நாதகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுகவுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்று மேடை பிரச்சாரங்களில் நாம் தமிழர் பேச்சாளர்கள் பட்டியலிட்டு கூறி வருவதால் இரு தரப்பினருக்கும் அண்மையில் கைகலப்பாகி நாம் தமிழர் நிர்வாகிகள் தாக்கப்பட்டனர். மேலும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எப்படியும் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் போட்டியிடுவார். நீங்கள் அவரை வெற்றி பெற வைத்தால் எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிடும் அப்போது மீண்டும் ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடக்கும் என நாம் தமிழர் கட்சி ஒரே போடாக போட்டுள்ளது.
சீமான் பிரச்சாரம்மேலும், ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற்றால் அவர் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு அடிக்கடி வர முடியாது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா இந்த தொகுதியை சேர்ந்தவர். அவரை வெற்றி பெற செய்தால் களத்தில் இருந்துகொண்டு மக்கள் பணி ஆற்றுவார். ஈரோடு கிழக்கில் சீமான் பிரச்சாரம் செய்ய வருவதற்கு முன்பு ஒரு ஓட்டுக்கு 3 ஆயிரம் என்று திமுக முடிவு செய்தது. முதற்கட்ட பிரச்சாரத்துக்கு சீமான் வந்து போன பின்னர் ஐந்தாயிரம் என்றார்கள். இரண்டாம் கட்ட பிரச்சாரத்துக்கு வந்ததை அடுத்து பத்தாயிரம் வரை கொடுக்க திட்டமிட்டு வருகின்றனர் என நாம் தமிழர் கட்சி சொல்கிறது.
கேளுங்கள்ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் இதற்காக வியப்படைய வேண்டாம் இதெல்லாம் குறைவுதான். உங்களிடம் நான்கு ஒட்டு இருந்தால் பைக் கேளுங்கள், பத்து ஒட்டு இருந்தால் கார் கேளுங்கள் கொடுக்கவில்லை என்றால் நாம் தமிழருக்கு போட போகிறோம் என்று சொல்லி பாருங்கள் நீங்கள் கேட்டது கிடைக்கும் என ஈரோடு கிழக்கு பிரச்சாரத்தில் சாட்டை துரைமுருகன் பேசியுள்ளார்.
இளங்கோவன் எம்பி சீட்2009 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியிடம் 49,336 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரிடம் தோல்வியடைந்தார். தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஒரே வேட்பாளர் இவராகத்தான் இருந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது அவரது மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.