லக்னோ: கடந்த தேர்தலில் உபியில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற 14 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான பொறுப்பை 4 ஒன்றிய அமைச்சர்களிடம் பாஜ ஒப்படைத்துள்ளது. உபி.யில் மொத்தம் 80 எம்பி.க்கள் உள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்த்து சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், பாஜவும் அதன் கூட்டணியான அப்னா தளமும் 64 தொகுதிகளை கைப்பற்றியது. சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெறமுடிந்தது. பின்னர் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ், கட்சியின் மூத்த தலைவர் அசம் கான் ஆகியோர் தங்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இ
தையடுத்து நடந்த இடைதேர்தலில் வெற்றி பெற்ற பாஜ 2 தொகுதிகளையும் தனது வசமாக்கி கொண்டது. வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில், எதிர்க்கட்சிகள் வசம் உள்ள 14 தொகுதிகளை கைப்பற்ற பாஜ வியூகம் வகுத்துள்ளது. அதன்படி, ஒன்றிய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், அன்னபூர்ணா தேவி, அஸ்வினி வைஷ்ணவ், ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு இந்த பொறுப்ைப பாஜ வழங்கியுள்ளது. வரும் தேர்தலில் உபியில் உள்ள 80 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என பாஜ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த
பட்டியலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலியும் இடம் பெற்றுள்ளது.