குறுங்காலீஸ்வரர் கோவில், சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இந்த கோவில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமாகும். வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. கோவிலுக்கு முன்னால் திருக்குளத்தையொட்டி ஒரு பதினாறுகால் மண்டபம். ஒரு தூணுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா வெளிச்சம் போட்டுக் குட்டியா ஒரு சந்நிதி. தூணில் இருக்கார் […]
