கே.பி.முனுசாமி ஆடியோ: ரூ.1 கோடி டீலிங் உண்மையா? ராஜேந்திர பாலாஜி உடைத்த சீக்ரெட்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நோக்கி தமிழ்நாடு அரசியல் களம் திரும்பியுள்ளது. இதில் ஆளும் திமுக கூட்டணி வெற்றி பெறுமா? இல்லை அதிமுக ஷாக் கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. இந்த சூழலில் அதிமுகவிற்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பிற்கு ஆளாக்கியுள்ளது. விஷயம் ரொம்ப பழசு என்றாலும் சர்ச்சை உண்மையா? எடப்பாடி தரப்பிற்கு சிக்கலா? எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ

ஏனெனில் ஆடியோவை வெளியிட்டிருப்பது
ஓ.பன்னீர்செல்வம்
ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. இந்த ஆடியோ விவகாரம் நடந்தது 2021 சட்டமன்ற தேர்தலின் போது எனக் கூறப்படுகிறது. அதில் எடப்பாடி ஆதரவாளர்
கே.பி.முனுசாமி
மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசிக் கொள்கின்றனர்.

ரூ.1 கோடி டீலிங்

கொளத்தூர் தொகுதியில் கிருஷ்ணமூர்த்தியை வேட்பாளராக இறுதி செய்ய கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டதாகவும், முதல்கட்டமாக கிருஷ்ணமூர்த்தி 50 லட்ச ரூபாய் ஏற்பாடு செய்து விட்டதாகவும் பேசுகின்றனர். அதை தனது மகனிடம் கொடுக்க சொல்கிறார் கே.பி.முனுசாமி. இது ஓபிஎஸ் தூண்டுதலால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கே.பி.முனுசாமிக்கு சிக்கல்

இதில் உண்மை என்னவென்று கிருஷ்ணமூர்த்திக்கே தெரியும் என தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கே.பி.முனுசாமி தெரிவித்தார். இந்த ஆடியோ விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறார். முன்னதாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

ராஜேந்திர பாலாஜி விளக்கம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் தலைவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ஈடுபடுவது வழக்கம் தான். தேர்தல் செலவு, விழாவிற்கான செலவு, அவசரத்திற்கான செலவு என கேட்கலாம். இதையெல்லாம் ஆடியோ பதிவு செய்து வெளியிடுவது அரசியல் நாகரிகம் கிடையாது. இது தவறான முன்னுதாரணம்.

கருத்துகள் உண்மை இல்லை

அந்த ஆடியோவில் சீட் வாங்கி தருகிறேன் என எந்த இடத்திலும் கே.பி.முனுசாமி சொல்லவே இல்லையே. எனவே அது பொய்யான தகவல். ஆடியோ உண்மையாக இருக்கலாம். அதிலுள்ள கருத்துகள் உண்மை கிடையாது என்றார். மேலும் பேசுகையில், எடப்பாடியாரின் வேட்பாளர் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பிருக்கிறது.

ஈரோடு கிழக்கில் வெற்றி

ஏனெனில் மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். தற்போதே வெற்றி பாதையை நோக்கி நடைபோட ஆரம்பித்து விட்டது. திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, விலைவாசி உயர்வு என மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.