சென்னை: சிற்பி திட்டத்தில் அரசு பள்ளியை சேர்ந்த 5,000 மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். 5000 மாணவர்கள் ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயிற்சியகத்திற்கு ரயிலில் அழைத்து செல்லப்பட்டனர். இயற்கையுடன் இணைந்த கல்வி சுற்றலா சென்ற ரயிலை தலைமை செயலாளர் இறையன்பு தொடங்கி வைத்தார். 5000 மாணவ, மாணவிகள் 4 சிறப்பு ரயில்களில் சிற்பி திட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் கல்வி சுற்றுலா சென்றனர்.
