சொரோஸ் கருத்தால் கவிழும் அளவிற்கு மோடி அரசு அவ்வளவு பலவீனமாகவா உள்ளது?: ப.சிதம்பரம் விமர்சனம்

புதுடெல்லி: 92 வயது முதியவரின் தவறான அறிக்கையில் கவிழும் அளவிற்கு பிரதமர் மோடியின் அரசு பலவீனமாக உள்ளதா என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சொரோஸ், பிரதமர் மோடி குறித்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில், ‘‘92வயதான வெளிநாட்டு கோடீஸ்வரின் தவறான அறிக்கையால் கவிழ்க்கப்படும் அளவிற்கு மோடி அரசு மிகவும் பலவீனமாக உள்ளதா என்பது எனக்கு தெரியாது.

இந்திய அரசாங்கத்திற்குள் யார் இருப்பார்கள், யார் வெளியேறுவார்கள் என்பதை இந்திய மக்கள் தான் தீர்மானிப்பார்கள். ஆனால் அவரது கருத்துக்களை இந்தியாவில்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்கும் முயற்சி என்று முத்திரை குத்துவது சிறுபிள்ளைதனமானது. ஜார்ஜ் சொரோசை புறக்கணித்து நூரியல் ரூபினி கூறுவதை கவனியுங்கள். அவர் இந்தியா அதிக அளவில் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படுகின்றது. இது போட்டிகள் ஏற்படுவதற்கு இடையூறு விளைவிக்கும், புதிதாக நுழைபவர்களை கொன்றுவிடும் என எச்சரித்துள்ளார். தாராளமயமாக்கல் திறந்த, போட்டி  பொருளாதாரத்தை உருவாக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.