ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படலாம்., அரசாங்கத்திடம் கோரிக்கை


இலங்கையில் இறக்குமதித் தடை தொடருமானால், நாட்டிலிருந்து பல ஜேர்மன் நிறுவங்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் நிறுவனங்கள் கோரிக்கை

அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ளது. ஆனால், இந்தத் தடையை தளர்த்துமாறு ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கை  அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் Holger Seubert இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் ஊடகவியலாளர்கள் குழுவிடம் தெரிவித்ததாவது, சில ஜேர்மன் நிறுவனங்கள் இறக்குமதித் தடை குறித்து கவலை தெரிவித்துள்ளன.

மேலும் 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி தடை நீடித்தால் சில நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் அவர் கூறினார். பல ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருவதுடன் வாகன உதிரி பாகங்கள் உட்பட ஜேர்மன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன.

ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படலாம்., அரசாங்கத்திடம் கோரிக்கை | German Companies May Withdraw From Sri Lanka

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான Mitsubishi மற்றும் Taisei ஆகியவை இலங்கையில் தனது செயற்பாடுகளை குறைப்பதாக அண்மையில் அறிவித்திருந்தன. இலங்கை அரசு திவாலானதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஜேர்மனியும் இலங்கைக்கான கடன்களை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இலங்கையின் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டவுடன் நிலைமை மேம்படும் என நம்புகிறோம் என ஜேர்மன் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் முதலீட்டாளர்களுக்கான ஒட்டுமொத்த வணிகச் சூழல் குறித்தும் கவலைகள் இருப்பதாக Seubert கூறினார்.

முதலீட்டுச் சபை (BOI) உட்பட இலங்கை அதிகாரிகளுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.