மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழாவின் போது ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்மிகத்தை போர்வையாக வைத்து அரசியல் மற்றும் வெறுப்பு பிரசாரத்தை முன்வைக்கும் நிகழ்ச்சி அங்கு நடந்து வருகிறது. ஆனால், ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை என பாஜ, சங்பரிவார் அமைப்புகள் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் நடத்தும் அரசியல் சார்ந்த பிரசாரத்திற்கு தான் இந்து சமய அறநிலைத்துறை தடை வித்துள்ளது. கோயில் பெயரை சொல்லி வசூல் வேட்டை நடப்பதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தரம் தாழ்ந்து எடப்பாடி விமர்சித்துள்ளார். இது அவரது தரத்தை காட்டுகிறது. அவர் ஏற்கனவே சசிகலாவிடம் தரையில் தவழ்ந்து பதவி பெற்றதை பார்த்தோம். இப்போது அவரது தரத்தை பார்த்துள்ளோம். தவழ்ந்தவர், தரம் தாழ்ந்தவர் ஆனார் என்றார்.