நத்தம்: சாணார்பட்டி அருகே தவசிமடையில் புனித அந்தோணியார் திருவிழாவை ஒட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, பாலமேடு, அலங்காநல்லூரில் இருந்து 500 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு தங்கக்காசு, வெள்ளிக்காசு பரிசாக வழங்கப்பட உள்ளது.
