ஈரோடு தொகுதியில் இடைத்தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் இருந்து வருகின்றனர். திமுக அமைச்சர்கள் பலரும் ஈரோட்டில் முகாமிட்டு உள்ளனர். ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று திமுக உறுப்பினர்களும், அதிமுக உறுப்பினர்களும் கடும் போட்டியில் உள்ளனர். ரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, எதிர்கட்சித்தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிதொடர்ந்து ஈரோட்டில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் பணி நேரத்திலும் சட்டமன்ற உறுப்பினரின் உடல் நிலையை நினைவில் வைத்து பாசத்துடன் விசாரித்த முதல்வர் முக ஸ்டாலினின் ஆடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சட்டப்பேரவை தொடரில் கால் எலும்பு முறிவு காரணமாக தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி கால் கட்டுடன் கலந்துகொண்டார். இதனை நினைவில் வைத்து தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் களப்பணி நிலவரம் குறித்து 179வது பாக பொறுப்பாளர் சர்மிளா பானுவிடம் விசாரிக்கையில், உடன் இருந்த ஜெ.கருணாநிதியிடம் களப்பணி குறித்து விசாரித்ததுடன் அவரது உடல் நிலை குறித்தும் பாசத்துடன் நலம் விசாரித்தது தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேர நெருக்கடி தருணத்திலும் எனது உடல் நிலையை நினைவில் வைத்து கேட்டறிந்தது மகிழ்ச்சியையும், புது தெம்பையும் தருகிறது. pic.twitter.com/1oSpiiybx4
— J Karunanithi MLA (@JkarunanithiMLA) February 17, 2023
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,10,713 ஆண் வாக்காளர்களும், 1,16140 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இவர்களுடன் 23 மாற்றுப் பாலின வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்களும் உள்ளனர். ஆக மொத்தம் 2,26, 898 வாக்காளர்கள் தொகுதியைச் சார்ந்தவர்களாக உள்ளனர். வாக்காளர்களுக்காக்க 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.