அசாமில், தொழிலதிபர் கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷா ஆலம் தலுக்தார், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 2022 நவம்பர் மாதம் தொழிலதிபர் ரஞ்சித் போராவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் அவரிடம் இருந்த 2 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளியான ஷா ஆலம் தலுக்தார் உட்பட ஐந்து பேரை சமீபத்தில் கைது செய்தனர். இவர்களை சம்பவம் நடந்த பகுதிக்கு போலீசார் நேற்று அழைத்துச் சென்ற போது ஷா ஆலம் தப்ப முயன்றார். இதையடுத்து, அவரை போலீசார் சுட்டனர்.
இதில் காயமடைந்த அவரை, போலீசார் குவாஹத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷா ஆலம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement