நலிந்த திரைக் கலைஞர்களுக்கு உதவியவர் மயில்சாமி: தினகரன் புகழஞ்சலி

சென்னை: பிரபல நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு அமமுக கட்சியி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த இவர், முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார். பல திரைப்படங்களில் நடித்துள்ள மயில்சாமி திடீர் உடல் நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.

மயில்சாமி மறைவு குறித்து அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பிரபல நடிகர் மயில்சாமி திடீரென உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பலகுரல் கலைஞராக திகழ்ந்ததோடு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்தவர்.

அரசியல் ஆர்வமிக்கவராக இருந்த மயில்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை கொண்டவர். நலிந்த திரைக் கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து அவர்களின் மனதில் இடம் பெற்றவர்.

இந்தத் துயரமான தருணத்தில் மயில்சாமியின் குடும்பத்தினருக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.