வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜினியாவின் நோர்போல்க் பகுதியில் லிட்டில் கிரீக் என்ற ஆரம்ப பள்ளி செயல்படுகிறது. இங்கு நேற்று முன்தினம்(பிப்.,17) வந்த 6 வயது குழந்தையின் பையில் கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளியில் இருந்த குழந்தைகள் அனைவரும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிறகு, பள்ளி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்ததுடன், குழந்தையின் தாயார் லெட்டி எம். லோபஸ்(35) மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement