ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் 25ம் தேதி மாலை 5 மணியுடன் முடிகிறது. அன்று மாலை 5 மணிக்கு பிறகு வேட்பாளர்களோ அல்லது அவரை சார்ந்தவர்களோ வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்க கூடாது, 25ம் தேதி பிரசாரம் நிறைவடைந்தவுடன், தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத அரசியல் கட்சியினர் இங்கு இருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், 25ம் தேதி இரவு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதி, வீடுகள், தேர்தல் பணி மனைகள் போன்றவற்றில் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இருந்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.