புதுடில்லி, புதுடில்லியில் பெண்ணை கொலை செய்து, ‘பிரிஜ்’ஜில் மறைத்து வைத்த வழக்கில் மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடில்லி அருகே மித்ராவோன் புறநகரில் சாஹில் கெலாட் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார்.
இந்நிலையில், இங்குள்ள பிரிஜ்ஜில் ஒரு பெண்ணின் உடலை மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போலீசார், மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, சாஹி-லை சமீபத்தில் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த பெண்ணின் பெயர் நிக்கி யாதவ் என தெரிய வந்தது.
ஹரியானாவைச் சேர்ந்த இவர், இந்த ஹோட்டலில் வேலை செய்துவந்த நிலையில், சாஹில் கெலாட்டுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை ரகசிய திருமணம் செய்துள்ளார்.
இதற்கிடையே, சாஹில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதை அறிந்து, போலீசாரிடம் கூறிவிடுவதாக நிக்கி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து சாஹில், தன் தந்தை வீரேந்தர் சிங், உறவினர்கள் ஆஷிஷ், நவீன் மற்றும் இரு நண்பர்கள் உதவியுடன் நிக்கி யாதவை, 10ம் தேதி கொலை செய்தது தெரியவந்தது.
எனவே, பெண்ணை கொலை செய்ய உடந்தையாக இருந்ததுடன், அதை மறைத்த குற்றத்திற்காக, இந்த வழக்கில் இவர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement