மயில்சாமியின் கடைசி ஆசை வார்த்தைகள்: உணர்ச்சி பொங்க வெளிப்படுத்திய டிரம்ஸ் சிவமணி


தமிழ் திரைப்பட நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில், அவரது கடைசி ஆசையை டிரம்ஸ் சிவமணி வெளிப்படுத்தியுள்ளார்.


மாரடைப்பால் உயிரிழந்த மயில்சாமி

தமிழ் சினிமாவில் மிமிக்ரி கலைஞராக முதன் முதலில் அறிமுகமாகி 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த மயில்சாமி (57) இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார்.

கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் இரவு முழுவதும் சிவராத்திரி பூஜையில் மயில்சாமி பங்கேற்றிருந்த நிலையில், அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மயில்சாமி உயிரிழந்துள்ளார்.

மயில்சாமி-யின் கடைசி வார்த்தை

இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற டிரம்ஸ் சிவமணி மயில்சாமியின் கடைசி ஆசைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் “மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு விவேக்கை அழைத்து வந்து இருக்கிறேன், அது போல பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களையும் இந்த கோயிலுக்கு அழைத்து வந்து இருக்கிறேன்”.

மயில்சாமியின் கடைசி ஆசை வார்த்தைகள்: உணர்ச்சி பொங்க வெளிப்படுத்திய டிரம்ஸ் சிவமணி | Last Wish Of Actor Mayilsamy Drums Sivamani Says

“ஆனால் எனக்கு ஒரு ஆசை உள்ளது,  ரஜினிகாந்தை இந்த மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வந்து இங்குள்ள சிவலிங்கத்திற்கு அவரது கையால் பாலாபிஷேகம் செய்ய வைக்க வேண்டும்” என்று மயில்சாமி தனது ஆசையை என்னிடம் தெரிவித்தார் என டிரம்ஸ் சிவமணி வெளிப்படுத்தினார்.

நடிகர் மயில்சாமி உயிரிழப்பதற்கு முன்பு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி பூஜையில் மயில்சாமி, டிரம்ஸ் சிவமணி கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.