போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் உள்ள ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகத்திற்கு களப்பயணத்திற்காக, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சென்றனர். மாணவர்கள் பஸ்சில் கட்னி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பன்னா மாவட்டத்தில் உள்ள குவாகேடா கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்சில் பயணம் செய்த 32 மாணவர்களில் 16 பேர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement