புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஸ்டைலிஷ் வடிவமைப்பில் இந்த போன் வெளிவந்துள்ளது.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது Y56 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ.
சிறப்பு அம்சங்கள்
- 6.58 இன்ச் FHD+ டிஸ்பிளே
- மீடியாடெக் டிமன்சிட்டி 700 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 8ஜிபி ரேம்
- 5,000mAh பேட்டரி
- 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி
- 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது
- டைப் சி சார்ஜிங் போர்ட் கொண்டுள்ளது
- இந்த போனின் விலை ரூ.19,999
- விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
Get ready to speak the language of style with vivo Y56.
To buy, visit https://t.co/2o4UZEhJLv#ItsMyStyle #BuyNow #5G pic.twitter.com/gnOo1Cdy6z
— vivo India (@Vivo_India) February 19, 2023