இன்று நடந்த லீக் 1 ஆட்டத்தில் PSG அணி LOSC அணிக்கு எதிராக 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
95-வது நிமிட ஃப்ரீ-கிக்
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அசாதாரண லீக் 1 ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி அடித்த 95-வது நிமிட ஃப்ரீ-கிக், பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) லில்லிக்கு (LOSC) எதிராக 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற வைத்தது.
இதில் கைலியன் எம்பாப்பே இரண்டு முறை கோல் அடித்தார், ஒரு கோல் அடித்த நெய்மர் கணுக்கால் காயத்துடன் ஸ்ட்ரெச்சரில் வெளியேற்றப்பட்டார்.
AFP
மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்பே
வழக்கமாக மெஸ்ஸி அணியில் இருக்கும் நிலையில், நெய்மர் அல்லது எம்பாப்பே யாரேனும் ஒருவர் தான் அணியில் இருப்பார்கள். ஆனால், கடந்த மூன்று ஆட்டங்களில் PSG அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் மூன்று ஸ்ட்ரைக்கர்களும் களமிறக்கப்பட்டனர்.
எம்பாப்பே இரண்டு கோல் அடித்து தனது தனித்திறனை வெளிப்படுத்தினாலும், கடைசி நேரத்தில் கிடைத்த ஃப்ரீ-கிக்கை கோலாக மாற்றி அணியை தவிர்கமுயாத வெற்றியை பெறச்செய்து, எல்லா காலத்திலும் சிறந்த வீரர் (GOAT) என்ற பெருமையை மெஸ்ஸி தக்கவைக்க தவறவில்லை.
Getty/Goal
தொடர் தோல்விகளால் கடும் விமர்சங்களை எதிர்கொண்ட மெஸ்ஸிக்கும், PSG அணிக்கும் இந்த வெற்றி மிக முக்கியமான வெற்றியாக அமைந்தது.
லில்லி (LOSC) அணியில் Bafode Diakite, Jonathan David, Jonathan Bamba தலா 3 கோல் அடித்தனர்.