Mayilsamy:இரவு 2 மணிக்கு வந்த போனால் தூக்கமே போச்சு: செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்த மயில்சாமி

Mayilsamy death: மயில்சாமி இரவில் தனக்கு வந்த ஒரு போன் அழைப்பால் அதிர்ச்சி அடைந்து அன்றில் இருந்து தூங்கும்போது போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டாராம்.

மயில்சாமிநகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை காலமானார். சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட அவர் அதிகாலை வீட்டிற்கு வந்திருக்கிறார். குடும்பத்தாரை வீட்டில் விட்டுவிட்டு திருவான்மியூர் கோவிலுக்கு கிளம்பியபோது அவருக்கு நெஞ்சுவலி ஏறப்பட்டிருக்கிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது.
அஞ்சலிசென்னை சாலிகிராமத்தில் இருக்கும் வீட்டில் மயில்சாமியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று இரவு அவரை கோவிலில் பார்த்த ரசிகர்களோ, மயில்சாமி இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை என்கிறார்கள்.

செல்போன்மயில்சாமி இரவு நேரத்தில் தன் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைப்பது குறித்து முன்பு பேசினார். அது பற்றி தற்போது ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பட விழாவில் மயில்சாமி கூறியதாவது, சிலர் விலை உயர்ந்த செல்போன் வைத்திருந்தாலும் நான் போன் செய்தால் எடுப்பது இல்லை. ஆனால் யார் எந்த நேரத்தில் போன் செய்தாலும் நான் எடுத்துப் பேசுவேன். ஒரு நாள் இரவு 2 மணிக்கு ஒருவர் எனக்கு போன் செய்து எந்த நடிகையை எந்த நடிகர் வச்சிருக்கார்னு கேட்டார் என்றார்.

​Mayilsamy: கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த மயில்சாமி: நிறைவேற்றி வைப்பாரா ரஜினி?

தூக்கம்மயில்சாமி மேலும் கூறியதாவது, யார் யாரை வச்சிருந்தால் எனக்கென்ன. அது சரி அந்த ஆளு எதற்காக எனக்கு போன் செய்து அப்படியொரு கேள்வியை கேட்டார் என யோசித்து யோசித்து எனக்கு அன்று இரவு தூக்கமே வரல. அந்த சம்பவத்திற்கு பிறகே நான் இரவு நேரத்தில் போனை ஆன் செய்து வைப்பது இல்லை என்றார்.

ரசிகர்கள்Mayilsamy:விடிய விடிய கோவிலில் இருந்துவிட்டு வீட்டிற்கு சென்ற 30 நிமிடத்திற்குள் இறந்த மயில்சாமிமயில்சாமி சொன்ன குட்டிக் கதையை கேட்டவர்கள் அன்று சிரித்தார்கள். இன்று அந்த கதையை நினைவூகூரும் ரசிகர்களுக்கு கண்ணீருடன் சிரிப்பு வருகிறது. நிலையில்லா வாழ்க்கை என்பது மயில்சாமியை பார்க்கும் போது புரிகிறது. நேற்று இரவு சிவன் கோவிலில் டிரம்ஸ் சிவமணி வாசிப்பை ரசித்து கேட்டார். வீட்டிற்கு போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றவர் ஒரேயடியாக சென்றுவிட்டார். என்ன ஒரு வாழ்க்கை இது என்கிறார்கள் ரசிகர்கள்.

உதவிமயில்சாமி சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பலருக்கு உதவி செய்து வந்தார். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டபோது கணக்கு பார்க்காமல் உதவினார். போகும் போது காசையா கொண்டு போகப் போகிறோம். எதையும் இல்லை. அதனால் உதவி செய்ய கணக்கு பார்க்கக் கூடாது என்று கூறி வந்தவர் மயில்சாமி என்பது குறிப்பிடத்தக்கது. சத்தமில்லாமல் தான தர்மம் செய்து வந்த அவருக்காக இப்படி திடீர் என்று மரணம் வர வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே சமயம் சிவபக்தன் சிவராத்திரியில் சிவலோகம் சென்றுவிட்டார். அதுவும் ஒரு கொடுப்பினை என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.