Mayilsamy: கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த மயில்சாமி: நிறைவேற்றி வைப்பாரா ரஜினி?

நடிகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. சிவ பக்தரான மயில்சாமி நேற்று கூட கோவிலுக்கு வந்ததை பார்த்தவர்கள் அவர் இல்லை என்கிற விஷயத்தை நம்ப முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்நிலையில் டிரம்ஸ் சிவமணி மயில்சாமி பற்றி கூறியதாவது, மேகநாதேஸ்வரர் கோவிலுக்கு நீங்கள் வர வேண்டும் அண்ணா என்றார் மயில்சாமி. சரி மயிலு, நான் இப்போ தான் காளஹஸ்தியில் இருந்து வருகிறேன். காளஹஸ்தியில் வாசித்துவிட்டு இப்போ வடபழனியில் வாசிக்கிறேன். வடபழனியில் வாசித்துவிட்டு தி.நகர் செல்கிறேன்.

எப்படியாவது வந்துவிடுகிறேன் மயிலு என்றேன். எனக்கு கால் மேல் கால் பண்ணிக்கிட்டே இருந்தார். கோவில் விஷயத்தில் மயில் எப்பொழுது கூப்பிட்டாலும் போய் வாசித்துவிடுவேன். அவர் தான் என்னை திருவண்ணாமலை கோவிலில் வாசிக்க வைத்தது. சிவ பக்தர் அவர்.

Mayilsamy:விவேக் போன்றே மயில்சாமியும் திடீர் மரணம்: சிரிக்க வைத்தவர்களுக்கு இப்படியொரு முடிவா?

இன்று காலை 3 மணி வரைக்கும் நான் மயிலுடன் இருந்தேன். மயிலு வந்து எனக்கு மைக் பிடித்துக் கொண்டு நின்றார். நான் ஓம்காரம் பாட ஆரம்பித்ததும் அவரும் மைக்கை வாங்கி பாடினார். ரொம்ப சந்தோஷம் அவருக்கு. 3 மணி வரைக்கும் ரொம்ப ஜாலியாக இருந்தார் அவர்.

நான் 5வது கால பூஜைக்காக மருதீஸ்வரர் கோவிலுக்கு போகிறேன் மயிலு என்றேன். திருவான்மியூரில் போய் வாசிக்கப் போகிறேன். நான் வீட்டில் அனைவரையும் டிராப் செய்துவிட்டு நானும் அங்கு வந்துவிடுகிறேன் அண்ணா என்றார். நீ வராத மயிலு, ரெஸ்ட் எடுத்துக்கோ என்றேன்.

நான் போய் வாசித்துவிட்டு உனக்கு அப்புறமா பேசுகிறேன். காரில் போகும்போது அவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். மயிலு ரொம்ப நன்றி. இந்த அழகிய சிவன் கோவிலுக்கு அழைத்ததற்கு நன்றி என் அருமை நண்பரே என அனுப்பினேன். உடனே அவர் பதிலுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அந்த வாய்ஸ் மெசேஜிலேயே எனக்கு தோனுச்சு, ஏன் மயிலு வாய்ஸ் ரொம்ப டல்லா, டயர்டா இருக்குனு.

அதன் பிறகு நான் இரண்டு கோவில்களில் வாசித்து வந்தேன். காலையில் 5.30 மணிக்கு கால் வருகிறது, போனை எடுத்து மயிலு என்ன விஷயம் மயிலு, எங்காவது வாசிக்க வேண்டுமா என கேட்டபோது, அவரின் மகன் அழ ஆரம்பித்துவிட்டான்.

அவருக்கு இசை என்றால் அதிலும் குறிப்பாக சிவன் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த சிவனின் நாளில் பகவான் அவருக்கு மோட்சம் கொடுத்திருக்கிறார். அவர் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை மிஸ் பண்ணுகிறோம். ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

நேற்று ப்ரோகிராமில் வாசிக்கும் போது எடுத்த பல வீடியோக்கள் என்னிடம் உள்ளது. அவருக்காக பிரார்த்தனை செய்கிறேன். அவர் கடைசியாக என்னிடம் ஒரு வார்த்தை சொன்னார். அண்ணா, நான் இந்த கோவிலுக்கு விவேக்கை அழைத்து வந்தேன். வேறு பிரபலங்களின் பெயர்களையும் சொன்னார். ஆனால் எனக்கு ஒரு ஆசை அண்ணா. இந்த கோவில்ல வந்து ரஜினி சாரை வந்து இந்த சிவலிங்கத்தில் உட்கார வைத்து அவர் கையால பால் ஊத்துவதை நான் பார்க்க வேண்டும் அண்ணா என்று என்னிடம் சொன்னார். மயிலு அது நடக்கும் என்றேன். ஏனென்றால் ரஜினி அண்ணனும் சிவன் பக்தன் தான். இது தான் மயிலு கடைசியாக சொன்னது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.