Mayilsamy: மயில்சாமி வாழ்க்கையை படமாகவே எடுக்கலாம்..மறைந்த நடிகர் விவேக் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..!

தமிழ் சினிமா தற்போது மேலும் ஒரு பிரபலத்தை இழந்துள்ளது. பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமியின் மறைவு தற்போது திரைத்துறையினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தாவணி கனவுகள் படத்தின் மூலம் ஒரு நடிகராகவேண்டும் என்ற கனவோடு அறிமுகமானார் மயில்சாமி.

மெல்ல மெல்ல தன் கடின உழைப்பாலும், நகைச்சுவை திறனாலும் இன்று ரசிகர்களின் மனம்கவர்ந்த நடிகராக உருவெடுத்துள்ளார். 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மயில்சாமி இன்று மாரடைப்பால் காலமானார்.

Actor Mayilsamy: சினிமா முதல் அரசியல் வரை.மறைந்த நடிகர் மயில்சாமி கடந்து வந்த பாதை..!

57 வயதில் மறைந்த நடிகர் மயில்சாமிக்கு திரையுலகை சார்ந்தவர்களும், ரசிகர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் மயில்சாமி சம்மந்தப்பட்ட வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மயில்சாமியின் நெருங்கிய நண்பரும் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகருமான விவேக் மயில்சாமியை பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது, மயில்சாமியை பற்றி நான் பாரதிராஜாவிடம் கூறியிருந்தால் இவரின் வாழ்க்கையை வைத்து படமே எடுக்கலாம் என கூறியிருப்பார்.

அந்த அளவிற்கு வித்யாசமான மனிதர் தான் மயில்சாமி. தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று யோசிக்காமல், தனக்கு வேண்டும் என நினைக்காமல் அனைத்தும் தந்து உதவக்கூடியவர் தான் மயில்சாமி.

ஒருமுறை சுனாமியின் போது பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தமிழ்நாட்டிற்கு வந்து மக்களுக்கு உதவி வந்தார். இதை அறிந்த மயில்சாமி தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய தங்க சங்கிலியை நேரில் சென்று விவேக் ஓபராய்க்கு போட்டுவிட்டு நன்றி கூறினார்

இதுபோல ஒரு மனிதரை பார்ப்பது அரிதான ஒன்றாகும் என விவேக் பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.