புதுடில்லி:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அடுத்த நிதியாண்டில் 6 சதவீதமாக வளர்ச்சி காணும் என, ‘நிடி ஆயோக்’கின் முன்னாள் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால், நாடு அதிக வளர்ச்சியை காணும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
உலகளவிலான பொருளாதார சூழல்கள் இந்தியாவை பாதிக்கும் அபாயங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றை நாம் நமது கொள்கை முடிவுகளால் சமாளித்தாக வேண்டும்.உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து தனியார் முதலீட்டை அதிகம் ஈர்ப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகியவற்றின் வாயிலாக, இந்த பாதிப்புகளை நாம் சமாளிக்க வேண்டும். இதனால், அடுத்த நிதியாண்டில் இந்தியா 6 சதவீத வளர்ச்சியை எட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அடுத்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி கணித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement