புதுடில்லி : மத்திய நிதியமைச்சகம், வங்கித் துறை தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நாளை நடத்த உள்ளது. இக்கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் நான்கு தனியார் துறை வங்கிகள் ஆகியவற்றின் உயரதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
அழைப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நுண், குறு, சிறு நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, அரசு அறிவித்திருந்த அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக, இந்த கூட்டம்
நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ‘எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ், கோட்டக் மகிந்திரா’ ஆகிய நான்கு தனியார் வங்கிகள் ஆகியவற்றின் தலைவர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஆலோசனைக்கூட்டம், மத்திய நிதியமைச்சகத்தின் செயலர் விவேக் ஜோஷி தலைமையின் கீழ் நடைபெற
உள்ளது.
அறிமுகம்
குறு, சிறு தொழில் நிறுவனங்கள், கொரோனா கால நெருக்கடிகளை சமாளிக்க, மத்திய அரசு, கடந்த 2020ல் ‘ஆத்ம நிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை
அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் வாங்கும் கடன்களுக்கு, 100 சதவீத உத்தரவாதத்தை அரசே வழங்கும்.இத்திட்டத்திற்காக, துவக்கத்தில் அரசு 3 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியது. அதன் பின், இது 4.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
அடுத்து 2022 – 23 நிதியாண்டு பட்ஜெட் அறிவிப்பில், மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி அறிவித்தது. இந்தவகையில், இதுவரை 5 லட்சம் கோடி ரூபாயை, இத்திட்டத்துக்காக அரசு ஒதுக்கி
உள்ளது.இந்நிலையில், இத்திட்டத்தின் வளர்ச்சி குறித்த நிலையை ஆய்வு செய்வதற்காக, நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement