ஆள் கடத்தும் நபர்களை நம்பலாம் என்று நீங்கள் நினைத்தால், அதைப் பற்றி மீண்டும் சிந்தியுங்கள் –

“ஆள் கடத்தும் நபர்களை நம்பலாம் என்று நீங்கள் நினைத்தால், அதைப் பற்றி மீண்டும் சிந்தியுங்கள்’ என அவுஸ்திரேலிய எல்லைப்படையின் தளபதி ஜஸ்டின் ஜோன்ஸ் Rear Admiral Justin Jones தெரிவித்துள்ளார்.

படகு வழியாக அவுஸ்திரேலிய எல்லைக்குள் வர முயல்பவர்கள் தொடர்பாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ,படகு வழியாக அவுஸ்திரேலிய எல்லைக்குள் வர முயல்பவர்களை எச்சரிக்கும் விதமாக பல மொழிகளில் காணொலி அறிவித்தல் இடம்பெற்று வருகிறது. தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட காணொலியில், ‘ஆள் கடத்தும் நபர்களை நம்பலாம் என்று நீங்கள் நினைத்தால், அதைப் பற்றி மீண்டும் சிந்தியுங்கள். கனடாவை நோக்கி சட்டத்துக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட படகுப் பயணத்தில் இருந்து 303 இலங்கை நாட்டவர்கள் சமீபத்தில் மீட்கப்பட்டனர்’ என அவுஸ்திரேலிய எல்லைப்படையின் தளபதி ஜஸ்டின் ஜோன்ஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை அகதிகளுக்கான விசாவில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாக்கள், பாதுகாப்பான புகலிட (ளுயகந-ர்யஎநn நுவெநசிசளைந) விசாக்களில் உள்ள 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை வழங்குவதாக கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி அவூஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் அறிவித்தது. படகு மூலம் வருபவர்களை நாடு கடத்தும் கொள்கை 2013ல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அதற்கு முன்பு வந்த அகதிகளுக்கு மட்டுமே தற்போதைய மாற்றம் பொருந்தும் என தொழிற்கட்சி அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த மாற்றங்களை ஆட்கடத்தல்காரர்கள் தங்கள் வியாபாரத்துக்காக பயன்படுத்துவார்கள் என முன்பு ஆட்சியிலிருந்த தாராளவாத தேசிய கூட்டணி கூறி வருகின்றமை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.