இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே வாக்குப்பதிவுக்கு உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு திமுகவினர் பிரஷர் குக்கரும், அதிமுகவினர் கொலுசையும் வினியோகம் செய்துவருவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், டாஸ்மாக் பணம் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்படுவதாக தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.
ஈரோடு கிழக்கு செங்கோடம்பாளையம் சக்தி நகர் டென்னிஸ் கோர்ட் எதிரில் உள்ள வீதியில் குமாரசாமி வீட்டில் இருந்து தி மு க வினர் குக்கர் வினியோகம். @TNelectionsCEO @ECISVEEP pic.twitter.com/f6A2FDVOde
— Savukku Shankar (@Veera284) February 20, 2023
இந்த நிலையில், ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். பிரஷர் குக்கர், கொலுசு விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், தற்போது தேர்தல் பறக்கும்படை சோதனை மேற்கொண்டு வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தல் தொகுதிகள் தேர்தல் பறக்கும் படையினரோடு, போலீசாரும், துணை ராணுவத்தினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் இதுவரை 61 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வந்தாலும், இடைத்தலை நிறுத்த வேண்டும் என்று எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.