வருகிற 27 ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் வாக்கு சேகரிபில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்று விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தலில் போட்டியிடும் இளங்கோவனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது :- “கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். கடந்த முறை ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருமகனை வெற்றி பெறச் செய்தீர்கள்.
இந்த முறை அவரது தந்தையை ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். “நான் சட்டமன்றத்தில் சொன்னேன், கமலாலயம் சென்று விடாதீர்கள் என்று. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கவில்லை. ஓபிஎஸ் மட்டுமே நாங்கள் கமலாலயம் செல்ல மாட்டோம் என்றுச் சொன்னார்.
ஆனால், இன்று இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயம் வாயிலில் நின்று கொண்டிருக்கின்றனர். அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு அவரின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
ஜெயலலிதாவுக்கோ, உங்களை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிற்கோ, மக்களுக்கோ நீங்கள் உண்மையாக இல்லை. உங்கள் எஜமானர்கள் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு மட்டுமே உண்மையாக இருக்கிரார்களில் ” என்று அவர் பேசியுள்ளார்.